கிரகிக்க முடியா
காரியம் செய்வார்
கிருபையால்
என்னை நடத்திவார் - 2
காருண்யத்தால் என்னை உயர்த்திடுவார்
களிப்பாய்
என்னை மாற்றிடுவார் - 2
இயேசுவால் ஆகாதது எதுவுமில்ல
இயேசுவால் முடியாதது ஒன்றுமில்ல - 2
எல்லாமே
ஆகும் எல்லாமே ஆகும்
இயேசுவால்
எல்லாம் ஆகும் - 2 - கிரகிக்க
1. அதிசயங்கள்
என் வாழ்வில் நடக்குமே
அடைக்கப்பட்ட
என் வாசல் திறக்குமே - 2
ஆச்சரியமாய்
காரியம் வாய்க்குமே
ஆக்கினை
எல்லாம் அகலுமே - 2 - இயேசுவால்
2. என் துக்கம்
சந்தோஷ்மாய் மாறுமே
என் புலம்பல்
களிப்பாக மாறுமே - 2
என் வறுமை
செழிப்பாக மாறுமே
என் வாழ்வு
பூரணமாய் ஆகுமே - 2 - இயேசுவால்
No comments:
Post a Comment