பிறந்தார் பெத்தலையில்
இயேசு
பாலகனாக
துறந்தார்
மகிமையை
இயேசு
மானிடர்க்காக - 2
மண்ணோர்
விண்ணோர் யாவருமே போற்றி...போற்றி
வாழ்த்துவோமே
இயேசுவையே பாடி... பாடி
இம்மானுவேல்
இம்மானுவேல்
பாவம்
போக்க வந்த குமாரன்
இம்மானுவேல் இம்மானுவேல்
சாபம்
தீர்க்க வந்த குமாரன் - 2
1. எல்லா ஜனத்திற்கும்
மிகுந்த சந்தோஷம்
உண்டாக்கும்
நற்செய்தியே
இருளில்
உள்ளோர் வெளிச்சத்தையே காண
ஒளியாக
இயேசு வந்தாரே - 2 - இம்மானுவேல்
2. அன்னை மரியின்
மைந்தனாக இயேசு
இப்பூவில்
அவதரித்தாரே
அன்று
தீர்க்கன் சொன்ன வாக்குத்தத்தம் யாவும்
தீர்க்கமாக
நிறைவேறினதே - 2 - இம்மானுவேல்
- Pr. Solomon Robert | Co-written - Pr. Jeswin Samuel
PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment