புதிய வருடம்
தந்த தேவா
புதிய வாக்குகள் தந்து உயிர்ப்பியும்
புதிய கிருபை புது அபிஷேகம்
புதிய தரிசனம் தந்து நடத்திடும் - 2
(புது)
வருஷத்தை நன்மையால் முடிசூட்டினீர்
பாதைகள் நெய்யாய் பொழிகின்றதே - 2
1. முந்தினவைகளை நினைக்க வேண்டாம்
பூர்வமானதை சிந்திக்க வேண்டாம்
புதிய காரியம் செய்வேன் என்றீர்
இப்பொழுதே தோன்றச் செய்திடும் - 2 - வருஷத்தை
2. யாக்கோபே நீ பயப்படவேண்டாம்
இஸ்ரவேலே நீ கலங்கிட வேண்டாம்
உன்னோடே கூட இருப்பேன் என்றீர்
என் தேவன் என் சார்பில் எழுந்தருளிடும் - 2 - வருஷத்தை
3. பெலவானை கண்டு சோர்ந்திட வேண்டாம்
பெலவீனன் என்று எண்ணிட
வேண்டாம்
பெரிய பர்வதம் சமமாகும் என்றீர்
மலைகள் அனைத்தும் வழிகளாக்கிடும்
- 2 - வருஷத்தை
4. செங்கடலைக் கண்டு அஞ்சிட
வேண்டாம்
யோர்தானைக் கண்டு திரும்பிட வேண்டாம்
உள்ளங்கால் பட பிரிந்திடும்
என்றீர்
உலர்ந்த தரை வழியாக நடத்திடும் - 2 - வருஷத்தை
- Bro. VETRI ELISHA
No comments:
Post a Comment