12 December 2025

மன்னாதி மன்னன் இயேசு வந்தாரே

மன்னாதி மன்னன் இயேசு வந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          மன்னாதி மன்னன் இயேசு வந்தாரே

            மண்ணான எனக்குள் ஜீவன் தந்தாரே தந்தாரே

            மன்னாதி மன்னன் இயேசு பிறந்தாரே

            சந்தோஷம் எந்தன் நெஞ்சில் தந்தாரே தந்தாரே

 

                        சத்தியத்தை சொல்லத்தானே வந்தாரே - (2)

                        அவர் சத்தியமாக உனக்கிருப்பார் எல்லாமே அவர் - (2) - மன்னாதி

 

1.         விண்ணுலக தேவன் அவர் மண்ணுலகம் வந்திடவே

            தன்னையும் தாழ்மையாக உனக்கு தந்தாரே

            இருளில் வாழ்ந்த உன்னை வெளிச்சம் ஆக்கிடவே

            உன்னையும் காக்க வந்த ராட்சகரும் அவரே

            உன்னைக் காத்தாரே உயிரும் கொடுத்தாரே

            இயேசு பாலனாக மண்ணில் வந்தவரே

            அவர் அன்புக்கு இணை ஏதுமே இல்லை புரியவச்சாரு - 2 - மன்னாதி

 

2.         கஷ்டம் நீக்கிடவே கண்ணீரைத் துடைச்சிடவே

            பூமிக்கொரு புனிதனாக மண்ணில் பிறந்தார்

            வாடின மனசுக்குல வாடாத அன்பை தந்து

            பாசமாய் கட்டியணைக்க ஓடி வந்தவரே

            அன்பைக் கொடுத்தாரே ஆசீர்வதிச்சாரே

            அப்பானு கூப்பிடாத உரிமை தந்தாரே

            அவர் அன்புக்கு இணை ஏதுமே இல்லை புரியவச்சாரு - 2 - மன்னாதி

 

 

- Sam Selvaraj

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...