19 December 2025

ஈசாயின் அடிமரமே

ஈசாயின் அடிமரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஈசாயின் அடிமரமே

            நேசா நீர் அதன் கிளையே - 2

            ஏசாயா உரைத்திடும் மெய்ப்பொருளே

            ஏதென்று அறிந்திடுவோம்

 

                        திகழும் ஜோதி தவழும் காட்சி

                        புகழ் நற்செய்தியே மகிழ்ச்சி

                        ஏக புதல்வன் தேவகுமாரன்

                        இயேசு கிறிஸ்திவரே

 

1.         யூதாவின் பால சிங்கம்

            நாதா உம் நாமமோங்கும் - 2

            யாக்கோபில் உதிக்கும் ஓர் நட்சத்திரம்

            யார் என்று விளம்பிடுவோம் - திகழும்

 

2.         தாவீதின் ஊர்தனிலே

            தாயார் மரி மகனே - 2

            வான பரன் பிறந்தார் அதனை

            வாரும் சென்றுரைத்திடுவோம் - திகழும்

 

3.         வானோர் பராபரனே

            ஏனோ வந்தார் புவியே - 2

            பாவியின் அடைக்கலமாய் உதித்தார்

            பாரும் நாம் வணங்கிடுவோம் - திகழும்

 

4.         ஆலோசனைக் கர்த்தரே

            அதிசயமானவரே - 2

            கர்த்தத்துவம் அவர் தோளிலுண்டே

            கண்டே இன்றுணர்ந்திடுவோம் - திகழும்

 

5.         செங்கோலும் யூதாவிலே

            மங்கி மறைந்திடாதே - 2

            சமாதான கர்த்தர் வருமளவும்

            சேர்ந்தென்றும் முழங்கிடுவோம் - திகழும்

 

 

- சாராள் நவரோஜி

 

 

YouTube Link

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...