01 January 2026

ஆலோசனை கர்த்தர் நீரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆலோசனை கர்த்தர் நீரே

            அதை நிறைவேற்ற எனக்கென்றும் துணை நிற்பீரே

            என் ஆலோசனை கர்த்தர் நீரே

            அதை நிறைவேற்ற என்றென்றும் துணை நிற்பீரே

 

                        உம் சித்தத்தை எனக்காய் திட்டம் செய்தீரே

                        நிச்சயம் நிறைவேற்றி துதிக்க செய்வீர் - 2

 

                        யாயேட்ஸ் (Yah'atz) உம்மை துதித்திடுவேன்

                        ஆலோசனை கர்த்தர் நீரல்லவோ

 

1          தாவீது பக்கம் நின்று ஆலோசனை தந்து

            தூஷித்த கோலியாத்தை முறியடித்தீர் - 2

            இக்கட்டின் நேரம் என் பக்கம் நின்று

            வெற்றியும் மகிழ்ச்சியும் தந்தவரே (தருபவரே) - 2 - யாயேட்ஸ்

 

 

2.         ஆவியின் கனிகளால் என்னையும் அலங்கரித்து

            சாட்சியாய் வாழ செய்பவரே - 2

            வறட்சியின் நேரம் வருந்தவிடாமல்

            வற்றாத நீரூற்றை தந்தவரே (தருபவரே) - 2 - யாயேட்ஸ்

 

3.         பாவத்தில் சிறைப்பட்ட ஜனத்தை இரட்சிக்க

            தரிசன திட்டங்கள் தருபவரே - 2

            சன்பல்லாத் தொபியா எதிர்த்து வந்தாலும் (நின்றாலும்)

            சாதிக்கும் தைரியம் தந்தவரே (தருபவரே) - 2 - யாயேட்ஸ்

 

 

- Bro. Augustin Rajasekar

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...