ஜெபிக்கின்ற நேரம்
நினைவும் மனமும் மதுரமாகின்றதே
- 2
மதுரமாகின்றதே
எங்கள் சுக வாழ்வு துளிர்கின்றதே - 2
ஜெபம் கேட்கும் இயேசு நீர் பதில் பேசும்
நேரம்
மாராவும்
இனிக்கின்றதே - 2
வனாந்திரம் செழிக்கின்றதே
வறண்ட நிலம் களிக்கின்றதே
- 2
1. தேன்கூடும் அதின் தெளி தேனும் - (2)
உம் வசனத்திற்கு இணையாகுமா
உகந்த
பலியாய் உயிர் கொடுத்தாலும்
உம்
அன்பிற்கு ஈடாகுமா - 2
உம்
அன்பிற்கு ஈடாகுமா
உம்
பேரன்புக்கிணையாகுமா - 2 - ஜெபிக்கின்ற
2. உம் மனதுருக்கம்
உம் மா இரக்கம் - (2)
நான் வாழ போதுமையா
உயிருள்ள
வரையில் உம்மை பாட ஆசை
ஆயுள்
தான் போதாதையா - 2
ஆயுள்
தான் போதாதையா
ஆயிரம்
ஆண்டுகள் போதாதையா - 2 - ஜெபிக்கின்ற
- Pr. Y. Wesley
PDF பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
No comments:
Post a Comment