26 January 2026

அழகே என் இயேசுவே அழகே

பாடல்

To Download Txt Lyrics file

 

                        அழகே என் இயேசுவே

                        அழகே என் பிரியமே

                        அழகே என் ஆத்ம நேசரே-2

 

1.         வெண்மையும் சிவப்புமானவர்

            தலை தங்கமயமானவர் - 2

            புறாவின் கண்களே

            கன்னம் கந்தவர்க்கமே

            வெள்ளைப்போளம் உதட்டில் வடியுதே - 2

 

                        அழகே உம் கண்களே

                        அழகே உம் கரங்களே

                        அழகே என் இயேசு ஒருவரே - 2

 

2.         தேனினும் இனிமையானவர்

            தேவிட்டாத சுவையானவர் - 2

            வாசனை இன்பமே ஊற்றுண்ட தைலமே

            அழகே உம் நாமம் என்றுமே-2

 

                        அழகே உம் செயல்களே

                        அழகே உம் வார்த்தையே

                        அழகே என் இயேசு ஒருவரே

 

3.         அழகிலும் அழகானவர்

            பதினாயிரம் பேரில் சிறந்தவர் -2 (இயேசு)

            இராஜாதி இராஜனே என் மணவாளனே

            அழகே உம் அன்பு என்றுமே-2

 

                        அழகே உம் ஆற்றலே

                        அழகே உம் கிருபையே

                        அழகே என் இயேசு ஒருவரே-2

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...