21 January 2026

ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம்

ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபமே ஜெயம் என்றும் ஜெபமே ஜெயம் - (2)

                        ஜெபித்தால் ஜெயம் வருமே - நீ (2)

 

1.         போராடி ஜெபித்தால் பொறுமை வரும்

            மன்றாடி ஜெபித்தால் மகிமை வரும் - 2

 

                        நிச்சயமாகவே முடிவுண்டு

                        உன் நம்பிக்கை வீண் போகாது - 2

 

2.         கண்ணீர் ஜெபத்தால் அற்புதம் வரும்

            கருத்தாய் ஜெபித்தால் அதிசயம் வரும் - 2 - நிச்சயமாகவே

 

3.         ஸ்தோத்திர ஜெபத்தால் கிருபை வரும்

            துதியின் ஜெபத்தால் ஜெயமும் வரும் - 2 - நிச்சயமாகவே

 

4.         ஊக்கமாய் ஜெபித்தால் உறவு வரும்

            உபவாச ஜெபத்தால் விடுதலை வரும் - 2 - நிச்சயமாகவே

 

5.         முழங்கால் ஜெபத்தால் மகிமை வரும்

            முழு இரவு ஜெபத்தால் முடிவு வரும் - 2 - நிச்சயமாகவே

 

6.         விசுவாச ஜெபத்தால் வெற்றி வரும்

            விழித்திருந்து ஜெபித்தால் நிறைவு வரும் - 2 - நிச்சயமாகவே

 

7.         குடும்பமாய் ஜெபித்தால் ஆசீர் வரும்

            சபையாய் ஜெபித்தால் எழுப்புதல் வரும் - 2 - நிச்சயமாகவே

 

 

- PS. V. அலெக்ஸாண்டர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...