அழைத்தவர்
உன்னை
நடத்திச்
செல்வாரே கலங்காதே
நீ கலங்காதே நீ கலங்காதே
கலங்காதே
மனம் திகையாதே - (2) - அழைத்தவர்
1. செங்கடலும் உன்னைக் கண்டு அலை புரண்டு வந்தாலும்
யோர்தானும் உன்னைக் கண்டு கரை புரண்டு
வந்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
2. சிங்கத்தின் கெபிக்குள்ளே
உன்னைத் தூக்கிப் போட்டாலும்
எரிகின்ற சூளையிலே உன்னைத்
தூக்கி எரிந்தாலும் கலங்காதே
மனம் திகையாதே அழைத்தவர்
உன்னை விடுவிப்பாரே - கலங்காதே
3. யேசபேலும் உன்னைக் கண்டு எதிர்த்து வந்தாலும்
ஆமானும் உன்னைக் கண்டு கலகம் தான் செய்தாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை உயர்த்திடுவாரே - கலங்காதே
4. எரிகோவும் உன்னைக் கண்டு
எதிர்த்து நின்றாலும்
வெள்ளம் போல் சாத்தானும்
உன் எதிரே வந்தாலும் கலங்காதே
மனம் திகையாதே அழைத்தவர்
உனக்கு உதவி செய்வாரே - கலங்காதே
5. கேரீத்தும் உன்னைக் கண்டு வற்றித்தான் போனாலும்
காகம் உனக்கு அப்பம் தான் கொடாமல் போனாலும்
கலங்காதே மனம் திகையாதே
அழைத்தவர் உன்னை போஷிப்பாரே - கலங்காதே
- Pastor. Lucas Sekar
No comments:
Post a Comment