21 January 2026

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய

            நல்ல இருதயமாய் மாறும்

            துதிக்க துதிக்க மனம் பாரம் நீங்கி

            நம் துக்கமெல்லாம் தீரும் - 2

 

                        கவலையெல்லாம் நீங்கும்

                        கண்ணீர் எல்லாம் மறையும் - 2

                        கழுகு போல் புது பெலனடைந்து

                        நம்மை பெலவானாய் மாற்றும் - 2 - ஜெபிக்க

 

1.         இடைவிடா ஜெபத்தினால்

            வரும் தடைகளை தகர்த்திடலாம்

            நாம் கருத்துடன் ஜெபிப்பதினால்

            நம் கண்ணீரை துடைத்திடலாம்

 

            ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் நீக்கிடும்

            வெற்றியை தந்திடும்

            புது மனிதனாக்கி நல் கிருபைகள் தந்து

            மகிமையில் சேர்த்திடும்

 

                        பெலவானாய் மாற்றிடும் சுகமதை தந்திடும் - (2) - ஜெபிக்க

 

2.         ஜெபத்தின் வல்லமையால்

            நாம் சாத்தானை வென்றிடலாம்

            துதியின் வல்லமையால்

            பெரும் சதிகளை முறித்திடலாம்

 

            ஜெபிக்கிற மனிதன் வெற்றியை பெறுவான்

            தோல்விக்கு அஞ்சிடான்

            கரடு முரடான வாழ்வைக் கூட

            இலகுவாய் கடந்திடுவான்

 

                        கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான் - (2) - ஜெபிக்க

 

3.         வேதம் சத்தியம் நமக்கு விடுதலை நிச்சயம்

            நமக்கு விடுதலை நிச்சயம்

            ஆவியின் பாடல்கள்

            நம்மை ஆற்றி தேற்றிடும்

 

            கட்டுகள் உடைக்கும் கவலைகள் தீர்க்கும்

            கண்ணீரை துடைத்திடும்

            நித்திய சத்திய சுத்த மகத்துவ

            வழிதனை காட்டிடும்

 

                        வேதமே தீபம் ஜெபமே ஜெயம் - (2) - ஜெபிக்க

 

 

- மோசஸ் ராஜசேகர்

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...