26 January 2026

அழுகையின் பள்ளத்தாக்கினை உருவ

பாடல்

To Download Txt Lyrics file

 

          அழுகையின் பள்ளத்தாக்கினை

            உருவ நடந்திடுவோம்

            மழையும் குளங்களை நிரப்பிடும்

            நீருற்றாய் மாற்றிடுவோம்

 

                        வல்லவர் இயேசு இயேசு

                        முன்னே செல்லுகின்றார்

                        வல்லவர் இயேசு இயேசு

                        தடைகள் அகற்றுகிறார்

 

 

1.         அன்னாளின் கண்ணீரை கண்டவர்

            இந்நாளில் அற்புதம் செய்வார்

            ஆகாரின் அழுகுரல் கேட்டவரால்

            ஆகாத காரியம் உண்டோ

 

2.         அழுதிட பெலனில்லா தாவீதின்

            அழுகையை கண்ட தேவன்

            துருத்தியில் கணக்கிட்டு ஊற்றினார்

            நிறுத்தினார் வல்லமையாய்

 

3.         வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து

            அவர் மேல் நம்பிக்கை வைப்போம்

            அவரே உன் காரியத்தை

            நிச்சயமாய் வாய்க்கப்பண்ணுவார்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...