363.
இராகம்: பைரவி ஆதி
தாளம் (491)
பல்லவி
ஜென்மம் ஏதுக்கு? ஜெபம் செய்யா
ஜென்மம்
ஏதுக்கு?-தபம் செய்யா
சரணங்கள்
1. நன்மை
ப்ரவாகர ஞானச் சொரூபத்தை
உண்மையினாலே உணர்ந்து வணங்காத - ஜென்
2. வானம்
புவியும் மகிழ்ந்து படைத்த மெய்ஞ்
ஞானப்ர காசத்தின் நன்றி அறியாத - ஜென்
3. தேடிப்
பாராபரன் பாதத்தைச் சிந்தித்து
நாடித்
தினந்தினம் பாடித் துதியாத - ஜென்
4. எங்கும்
நிறைந்த பராபரன் இல்லை என
றங் ககம் கொண்டெங்கும்
அலைந்து திரிகின்ற - ஜென்
5. ஆவியினால்
உண்மை யாலும் அரூபியாம்
ஜீவப் பிரானைத் தியானித்துப் போற்றாத - ஜென்
6. உத்தம
சத்திய வேதத்தின் உண்மையைப்
புத்தியினால்
கண்டு போற்றி கைக்கொள்ளாத - ஜென்
7. யாவும்
அறிந்து நடுத்தீர்க்க வல்ல ஓர்
தேவன்
உண்டென் றுளம் சிந்தனை செய்யாத
- ஜென்
- வேதநாயகம்
சாஸ்திரியார்
No comments:
Post a Comment