26 January 2026

அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா

பா.கீ:1

To Download Txt Lyrics file

 

                                    பல்லவி

 

                   அல்லேலூயா ஜெயம் அல்லேலூயா (3)

 

                             அனுபல்லவி

 

                        ஆனந்தக் கூட்டமாய் ஒன்றாகக் கூடி

                        ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

 

                             சரணங்கள்

 

1.         விசுவாசக் கூட்டத்தார் ஒன்றாகச் சேர்வோம்

            தர்க்கங்கள் யாவையும் தள்ளிடுவோமே

            இயேசுவின் அன்பையே உயர்த்திடுவோமே

            என்றென்றும் அன்பிலே ஒன்றாய் நின்றே - ஆனந்த

 

2.         உறுப்புகள் பலவாகும் என்றிருந்தாலும்

            உடல் ஒன்று ஒன்றேதான் ஆகுமன்றோ

            போர் செய்ய ஒன்றாய் சேர்ந்திடுவோமே

            எதிரி சாத்தானை வீழ்த்திடவே - ஆனந்த

 

3.         ஜெய வீரர் இயேசு நம் முன் செல்கிறாரே

            ஜெப சிந்தை கொண்டோராய் பின் செல்லுவோமே

            வேதமாம் பட்டயம் ஏந்திடுவோமே

            வேரோடு சாத்தானை வீழ்த்திடுவோம் - ஆனந்த

 

4.         உப்பாய் ஒளியாய் உலகுக்கு ஆவோம்

            உறக்கம் விடுத்து நாம் எழுந்திடுவோமே

            இயேசுவின் பாதம் எண்ணற்றோர் சேர

            இணைக்கும் பணியில் முன்னே நிற்போம் - ஆனந்த

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...