27 January 2026

அறுவடையோ மிகுதி

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அறுவடையோ மிகுதி

                        அறுவடையோ மிகுதி

                        ஆட்களோ கொஞ்சம்

                        அறுவடையின் தேவனை நோக்கிடுவோம்

1.         வயல் நிலங்கள் எல்லாம்

            விளைந்து விட்டதன்றோ

            ஓடி ஓடி அறுப்போம்

            களஞ்சியத்தில் சேர்ப்போம்

2.         திறப்பிலே நிற்போம்

            விரிசல்களை அடைப்போம்

            விழித்திருந்து ஜெபிப்போம்

            வெற்றி கண்டு மகிழ்வோம்

3.         நதியளவு கண்ணீர்

            நாள்முழுதும் வடிப்போம்

            இந்தியாவை நினைப்போம்

            இரவும் பகலும் ஜெபிப்போம்

4.         ஆத்ம பாரம் கொள்வோம்

            ஆர்வத்தோடு செல்வோம்

            யுத்த களத்தில் நிற்போம்

            கோலியாத்தை வெல்வோம்

5.         தொடர்ந்து நன்மை செய்வோம்

            சோர்வில்லாமல் செல்வோம்

            குறித்த காலம் வருமே

            அறுவடை நிச்சயமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...