23 January 2026

அல்லேலூயா அல்லேலூயா ஆத்துமாவே கர்த்தரைத் துதி

பா.கீ:9

To Download Txt Lyrics file

 

                   அல்லேலூயா அல்லேலூயா

                    ஆத்துமாவே கர்த்தரைத் துதி

                        உயிர் உள்ளளவும் அவரைத் துதித்து

                        உள்ளளவும் பாடிடுவேன்

 

1.         பிரபுக்கள் மனுஷரை நம்பாதேயுங்கள்

            அவர்கள் யோசனைகள் அழிந்துபோகும்

            யாக்கோபின் தேவன் துணை கொண்டு

            கர்த்தரை நம்புவோர் பாக்கியவான். - அல்லேலூயா

 

2.         யாவையும் படைத்து உண்மையைக் காக்கிறார்

            ஒடுக்கப்பட்டோர்க்கு நியாயம் செய்கிறார்

            பசித்தோர்க்கு ஆகாரம் தந்து

            கட்டுண்டோரைக் கட்டவிழ்க்கிறார் - அல்லேலூயா

 

3.         குருடர் கண்களைக் கர்த்தர் திறந்து

            விழுந்தோரைத் தூக்கி விடுகிறார்

            நீதிமான்களைக் கர்த்தர் நேசித்து

            பரதேசிகளையோ நித்தம் காக்கிறார். - அல்லேலூயா

 

4.         திக்கற்ற பிள்ளை விதவைகளைப் போஷித்து

            துன்மார்க்கர் வழியைக் கவிழ்க்கிறார்

            சீயோனைக் கர்த்தர் என்றென்றுமாய்

            தலைமுறையாய் அரசாளுவார். - அல்லேலூயா

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...