ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா - (2)
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே - (2)
புகழ்கின்றேன்
பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம்
பிறந்தது - 2
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே
- 2
இன்றும் என்றும் வல்லவரே
- (2)
1. கண்ணீரைக் கண்டீரையா கரம் பிடித்தீரையா - (2)
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா - (2) - புகழ்கின்றேன்
2. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே - (2)
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா - (2) - புகழ்கின்றேன்
3. உறுதியாய் பற்றிக்கொண்டேன் உம்மையே நம்பி
உள்ளேன் - (2)
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே - (2) - புகழ்கின்றேன்
- பெர்க்மான்ஸ்
No comments:
Post a Comment