அல்பா
ஒமேகா ஆதியும் நீரே
நேசர்
சத்தம் கேட்டேன்
அவரை இன்று பணிவேன்
அவர் சமூகம்
எனக்குப் பேரின்பம் - 2
1. இயேசு நிற்கிறார் அமர்ந்த கடலிலே
அழைத்துச்செல்கிறார்
அமைதி வாழ்விலே - 2
லீபனோன் சிகரத்தில் ஓங்கி
நிற்கும் விருட்சம் போல்
கிருபை நிறைந்த இடத்தில்
நான்
செழித்து வளருவேன் - 2 - அல்பா
2. வாடை எழும்பிடும் தென்றல் வீசிடும்
ஜீவ தண்ணீரின் துறவு தோன்றிடும் - 2
லீபனோன் சிகரத்தில்
ஓடிவரும் வெள்ளம்போல்
வசனம் நிறைந்த இடத்தில்
நான்
கனிகள் பெற்றிடுவேன் - 2
- அல்பா
3. நிழல் சாய்ந்திடும் பகல் குளிர்ந்திடும்
வெள்ளைப் போள வாசனை வந்து
நிறைந்திடும் - 2
லீபனோன் சிகரத்தில்
சீறிவரும் சிங்கம்போல்
வீரம் நிறைந்த இடத்தில்
நான்
ஜெயித்து வளருவேன் - 2 -
அல்பா
4. லீலி புஷ்பமே கிச்சிலி மரம் இதோ
மதுரமானவர் மகிமை தருகிறார்
லீபனோன் சிகரத்தில் வீசிவரும் வாசனை
சாட்சி நிறைந்த இடத்தில் பெருகி
படர்ந்திடும் - 2 - அல்பா
No comments:
Post a Comment