21 January 2026

ஜெபிக்க கூடி வந்தோம்

ஜெபிக்க கூடி வந்தோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபிக்க கூடி வந்தோம்

                        உம்மை துதிக்க நாடி வந்தோம்

                        உழைக்க ஓடி வந்தோம்          

                        ஒப்புக் கொடுத்து தாழ்த்தி தந்தோம்

 

1.         இன்பம் தரும் இயேசுவே உமக்காக

            உண்மையுடன் உழைக்க பெலன் தாரும் - 2

            நன்மை தாரும் நாதரே உமக்காக

            வாஞ்சையோடு உழைக்க வரம் தாரும் - 2 - ஜெபிக்க

 

2.         போ என்று சொன்ன கர்த்தரே உமக்காக

            புறப்படவும் உழைக்கவும் பெலன் தாரும் - 2

            அனுப்பென்று அன்பாய் பணித்தவரே

            ஜெபிக்கவும் அனுப்பவும் அருள் தாரும் - 2 - ஜெபிக்க

 

3.         அர்ப்பணித்தேன் என்னையே மீண்டுமாக

            அயராது உழைக்க உறுதி கொண்டேன் ஐயா - 2

            பொற்பாதம் பணிந்தேன் இரட்சகரே

            வந்து ஆசி தந்து வழி நடத்தும் - 2 - ஜெபிக்க

 

 

- Sam T. Kamaleson

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...