26 January 2026

அழ‌கான‌வ‌ர் அருமையானவர்

நிஜீ.கீதங்கள்:927

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             பல்லவி

 

                        அழகானவர் அருமையானவர் இனிமையானவர்

                        ம‌கிமையான‌வ‌ர் மீட்ப‌ரான‌வ‌ர் - 2

                        அவர் இயேசு இயேசு இயேசு - (2)

 

                             சரணங்கள்

 

1.         சேனைகளின் கர்த்தர் நம் மகிமையின் இராஜா

            என்றும் நம்மோடிருக்கும் இம்மானுவேலர் - 2

            இம்மட்டும் இனிமேலும் எந்தன் நேசர் - (2)

            என்னுடையவர் என் ஆத்ம நேசரே - (2) - அழகானவர்

 

2.         கன்மலையும் கோட்டையும் துணையுமானவர்

            ஆற்றித் தேற்றிக் காத்திடும் தாயுமானவர் - 2

            என்றென்றும் நடத்திடும் எந்தன் இராஜா - (2)

            என்னுடையவர் என் நேச கர்த்தரே - (2) - அழகானவர்

 

3.         கல்வாரி மேட்டினில் கொல்கொதாவிலே

            நேசர் இரத்தம் சிந்தியே என்னை மீட்டார் - 2

            பாசத்தின் எல்லைதான் இயேசு இராஜா - (2)

            என்னுடையவர் என் அன்பு இரட்சகர் - (2) - அழகானவர்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...