27 January 2026

அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே

பதிவிறக்கம்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

1.       அளவில்லா மீட்பே அன்பின் ஆழியே!

            இயேசுவால் வந்த பூரண தயவே!

            உலகமெல்லாம் மீட்கும் பாக்கியத் திரள்!

            யாவர்க்காயும் பாயும்; யாவர்க்காயும் பாயும்;

            யாவர்க்காயும் பாயும்; நீ என் மேல் புரள்

 

2.         பாவங்கள் ஏராளம், கறை நிறைந்தேன்

            மனங்கசந்து நான் கண்ணீர் சொரிந்தேன்

            அழுகை வீணாம்! ரத்தாம்பரக் கடல்!

            அலை சுத்தி செய்யும்; அலை சுத்தி செய்யும்;

            அலை சுத்தி செய்யும்; வா என் மேல் புரள்

 

3.         ஆசைகள் அகோரம், கோபம் கொடூரம்

            உள்ளத்தை ஆளுது தீமையின் உரம்;

            உன் அலைகளின் கீழ், ஓ! பெருங்கடல்!

            மீட்புத்தோன்றுதிதோ; மீட்புத்தோன்றுதிதோ;

            மீட்புத்தோன்றுதிதோ; வா, என்மேல் புரள்

 

4.         சோதனைகள் மோத, பயங்கள் சூழ

            பாழாச்சுதென் ஜீவன் சுகங்கள் மாள

            மெய்யாய் இனிச் சுகம்! சுத்த நீர்க்கடல்!

            என்னை சுத்தி செய்வாய்; என்னை சுத்தி செய்வாய்;

            என்னை சுத்தி செய்வாய்; வா, என் மேல் புரள்

 

5.         தயா சாகரமே! வாஞ்சையாய் நின்றேன்

            ஜீவிக்கும் ஆச்சர்ய அலை ஓரம் நான்,

            திரும்ப வந்தேன் கறை போக்குங் கடல்!

            உன்னை விட்டுப் போகேன்; உன்னை விட்டுப் போகேன்;

            உன்னை விட்டுப் போகேன்; வா, என்மேல் புரள்

 

6.         புரண்டுவரும் அலைகளைத் தொட்டேன்

            மீட்க வல்லோன் என்னும் இரைச்சல் கேட்டேன்

            மீட்படைவேன் என்று நம்பி அலையில்

            இதோ மூழ்கிறேன் நான்; இதோ மூழ்கிறேன் நான்;

            இதோ மூழ்கிறேன் நான்; வா, என்மேல் புரள்

 

7.         அல்லேலூயா! இனி என் ஜீவகாலம்

            அவர் துதியிலே மகிழ் கொள்ளுவேன்

            அளவில்லா மீட்பாம் அன்பின் ஆழியை

            இயேசு திறந்தார்; இயேசு திறந்தார்;

            இயேசு திறந்தார்; எல்லாருக்காகவும்!

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...