29 January 2026

அன்பரின் நேசம் பெரிதே

நிஜீ.கீதங்கள்:1294

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அன்பரின் நேசம் பெரிதே

                        அதை நினைந்தே மகிழ்வோம்

 

1.         உலக தோற்றம் முன்னமே

            உன்னத அன்பால் தெரிந்தோரே

            இந்த அன்பு ஆச்சரியமே

            இன்பம் இகத்தில் வேறு இல்லை

 

2.         அன்பின் அகலம் நீளமும்

            ஆழம் உயரம் அறிவேனோ

            கைவிடாமல் காக்கும் அன்பு

            தூக்கி எடுத்து தேற்றும் அன்பு

 

3.         பாவ சேற்றில் எடுத்தென்னை

            பாவமெல்லாம் தொலைத்தாரே

            தூய இரத்தம் சிந்தி மீட்ட

            தூய்மையான தேவ அன்பு

 

4.         தந்தை தாயும் மறப்பினும்

            தாங்கி சேர்ப்பேன் என்றாரே

            உள்ளங்கையில் வரைந்தாரே

            உன்னதர் அன்பை என்றும் மறவேன்

 

5.         பர்வதங்கள் நிலை அதிர்ந்தாலும்

            பூமியின் நிலையே மாறினாலும்

            நீங்கா அன்பின் மேன்மையினையே

            நீடூழியாய் நாம் பாடி மகிழ்வோம்

 

 

- Rev. V. நடராஜ முதலியார்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...