அல்லேலூயா துதி மகிமை என்றும்
இயேசுவுக்கு
செலுத்திடுவோம் - 2
ஆ...
அல்லேலூயா - 2
1. மோட்சத்தை அடைந்திடவே
பாடுகள் படவேண்டும் - 2
பாடுகள் மத்தியில் பரமன் இயேசுவில்
நிலைத்து நிற்க வேண்டும் - 2 - அல்லேலூயா
2. ஜெபத்திலே தரித்திருந்து
அவர் சித்தம் நிறைவேற்று - 2
முடிவு பரியந்தம் அவரில் நிலைத்து
பலனை பெற்றுக் கொள்ளு - 2 - அல்லேலூயா
3. சென்றவர் வந்திடுவார்
நம்மை அழைத்துச் சென்றிடுவார் - 2
அவருடன் செல்ல ஆயத்தமாவோம்
அவருடன் வாழ்ந்திடவே - 2 - அல்லேலூயா
4. சிலுவையை சுமப்பாயா
உலகத்தை வெறுப்பாயா - 2
உலகத்தை வெறுத்து
இயேசுவின் பின்னே ஓடி வருவாயா - 2 - அல்லேலூயா
5. கண்ணீர் துடைத்திடுவார்
கவலைகள் போக்கிடுவார் - 2
கரங்களை நீட்டியே கருணையோடு
கர்த்தரே காத்திடுவார் - 2 - அல்லேலூயா
No comments:
Post a Comment