22 January 2026

ஜெய கிறிஸ்துவிலே ஜெய கிறிஸ்துவிலே

ஜெய கிறிஸ்துவிலே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          ஜெய கிறிஸ்துவிலே

            நாம் ஜெயம் எடுப்போம்

            என்றும் தோல்வி நமக்கு இல்லையே

            அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்

 

                        அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

 

1.         யூத ராஜசிங்கமே இயேசு

            யுத்தத்தில் வல்லவரே

            யுத்தங்களை ஓயப் பண்ணும்

            அவரின் வலக்கரமே

            நம் வாழ்வில் செங்கடல் பிளந்து விட்டார்

            சத்துரு சேனை அதிலே மூழ்கடித்தார்

 

2.         ஜெயம் இல்லாத நமது வாழ்வை

            ஜெயமாய் மாற்ற வந்தார்

            தேவனாலே பிறக்க வைத்தார்

            உலகம் ஜெயிக்க வைத்தார்

            விசுவாசத்தில் நம்மை பெலப்படுத்தி

            நம் வாழ்க்கையிலே ஜெயம் தந்து விட்டார்

 

3.         வேதனை சோதனை பாடுகள் எல்லாம்

            நம்மை என்ன செய்திடும்

            வியாதி வறுமை நிந்தைகள் நெருக்கம்

            நம்மை என்ன செய்திடும்

            இதை நமக்காய் சிலுவையில் சகித்து விட்டார்

            எல்லாம் சுமந்து தீர்த்து ஜெயித்து விட்டார்

 

 

- S.J.C. Selvakumar

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...