22 January 2026

அரியணையில் ராஜாவாக

நிஜீ.கீதங்கள்:2622

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அரியணையில் ராஜாவாக

                        வாழ்பவரே யெசுவா

 

            உலகை ஆளும் ராஜாவாக வாழ்பவரே யெசுவா

            ராஜாதி ராஜா மகா ராஜா எங்கள் யெசுவா

 

                        யெசுவா யெசுவா உயிர்த்தெழுந்த யெசுவா

                        உம்மை போல் தெய்வம்

                        இந்த உலகில் இல்லை யெசுவா

 

1.         இரண்டாம் ஆதாமாக

            சாத்தானுக்கு சவாலாக

            சத்துருவை ஜெயிக்க வந்த

            யூத ராஜ சிங்கமாக

            சிலுவையில் சாத்தானை நீர்

            மொத்தமாக அழித்து விட்டீர்

            துரைத்தனங்கள் அதிகாரங்கள்

            அனைத்தையும் உரிந்து போட்டீர்

 

2.         உயர வானத்திலும் கீழே பூமியிலும்

            மேலான ஒரே நாமம்

            யெசுவா என்ற ஒரே நாமம்

            யெசுவா பெயரை சொன்னால்

            பேய்கள் எல்லாம் நடு நடுங்குதய்யா

            தீராத வியாதி எல்லாம் நொடி பொழுதில்

            மறையுதய்யா

 

3.         மலைகள் செம்மறி போல்

            துள்ளி பாய்ந்து துதிக்குதாமே

            நாங்களும் பாடுகிறோம்

            சந்தோசமாய் ஆடுகிறோம்

            பூமி மாத்திரமா யெசுவாவை போற்றுகிறது

            சுற்றும் கோள்கள் எல்லாம்

            அப்பாவைத் தான் பாடுகிறது

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...