27 January 2026

அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல் அழிந்து போகின்ற

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அறுத்துச் சேர்க்க ஆளில்லாமல் அழிந்து போகின்ற

                        பழுத்துக் கிடக்கும் அறுவடையை பாரும் இறைவா (இறைவா)

1.         திறமை மிகுந்த இளைஞர் குலம் சும்மா நிற்குதே

            பரமன் உந்தன் அழைப்புக்காக காத்துக்கிடக்குதே

            உழைக்க ஆர்வம் உள்ள இந்த இளைஞரையெல்லாம் - 2

            அழைத்துச்சேரும் உம்மரசை பரப்புவதற்கே

2.         அறுவடைக்கு அனுப்பட்டோர் அதிகமில்லையே

            அனுப்பப்பட்டோர் அறுவடைக்கும் போதவில்லையே

            எத்தனையோ பணிகளிலே மூழ்கி இருப்பதால் - 2

            மறைபரப்புப் பணியைச் செய்ய இயலவில்லையே

3.         கால நேரம் தேவை எல்லாம் அறிந்த இறைவா

            துறவறத்தோர் இப்பணிக்கு துணையாய் வந்திட

            தந்தருளும் ஆற்றல் மிக்க இல்லறத்தோரை - 2

            உம்மரசாம் மீட்புப்பணி முழுமை எய்திட

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...