பல்லவி
அழைக்கிறார் அழைக்கிறார் இயேசு உன்னை
- (2)
உனக்காய் ஜீவன் ஈந்தவர் அவரே
கனிவாய் அழைக்கிறாரே - 2
சரணங்கள்
1. கல்வாரி மீதிலே மீறுதல் தொலைக்க
காயங்கள் அடைந்தனரே - 2
வாதைகள் யாவும் போக்கிட வல்ல
வார்த்தையை நம்பி வா - 2 - அழைக்கிறார்
2. இதயம் நொந்து நொறுங்குண்டோரை
இகத்தில் தேற்றியவர் - 2
கீலேயாத்தின் நல் ஔஷதமாக
காயங்களாற்றிடுவார் - 2 - அழைக்கிறார்
3. ஏகனாய் நீயும் கானக வழியே
ஏகிடும் வேளையிலும் - 2
மேய்ப்பனைப் போல இன்குரல் தந்து
மா தயவாய் அணைப்பார் - 2 - அழைக்கிறார்
4. ஆவியினாலே அபிஷேகித்தே
ஆலயமாக்கிடவும் - 2
நித்திய மகிமை பெற்றதில் வளர
சத்தியர் தயை அருள்வார் - 2 - அழைக்கிறார்
5. இயேசுவே நித்திய ஜீவனும் வழியும்
சத்தியமுமானவரே
இயேசுவல்லாது பேரின்ப ஊற்றே
இப்பூவிலுனக்கில்லையே - 2 - அழைக்கிறார்
No comments:
Post a Comment