26 January 2026

அழைக்கிறார் அழைக்கிறார் அன்போடு

நிஜீ.கீதங்கள்:2485

To Download Txt Lyrics file

 

                   அழைக்கிறார் அழைக்கிறார்

                        அன்போடு இயேசுன்னை அழைக்கிறார்

                        கனிவோடு கரம் நீட்டி அழைக்கிறார்

 

1.         வருத்தங்கள் பாரங்கள் சோகங்களோ

            வருவாய் இயேசுன்னை அழைக்கிறார்

            வல்லவர் இயேசு உன் வாழ்விலே

            வருத்தங்கள் நீக்கி நடத்திடுவார்

 

2.         பாவங்கள் சாபங்கள் தோல்விகளோ

            பாதம் சேருவாய் இயேசுவண்டை

            பரமன் இயேசு உன் வாழ்விலே

            பாவங்கள் நீக்கி ஜெயம் தருவார்

 

3.         உலகினில் உனக்கென யாருமில்லையோ

            உணர்ந்திடுவாய் இயேசு அன்பினையே

            உத்தமர் இயேசு உன் வாழ்விலே

            உன்னத அன்பினை தந்திடுவார்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...