23 January 2026

அலையலையாய் வரும் ஆசீர்வாதம்

நிஜீ.கீதங்கள்:2625

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அலையலையாய் வரும் ஆசீர்வாதம்

            அது தேவனின் ஆசீர்வாதம்

            அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால்

            என்றும் மாறாத ஆசீர்வாதம் - 2

 

                        ஆசீர்வாதங்கள் ஆசீர்வாதங்கள்

                        ஆசீர்வாதங்கள் ஆசீர்வாதங்கள்

 

1.         ஆபிரகாமை தேவன் அழைக்க

            அவன் கீழ்ப்படிந்தானே

            அசைவில்லாத விசுவாசம்

            தன் வாழ்வினில் அடைந்தானே

 

            அதுவே அவனது ஆசீர்வாதம்

            அது போல் உன்னை ஆசீர்வதிப்பார்

 

2.         வானத்து நட்சத்திரங்கள் போல

            ஆசீர்வாதம் அடைந்தான்

            கடற்கரை மணலைப் போல ஜனம்

            தரிசனம் கண்டானே

 

            அது போல் உன்னை அழைத்த தேவன்

            அது போல் உன்னை ஆசீர்வதிப்பார்

 

3.         தேவன் சொன்ன வார்த்தைகளை

            விசுவாசத்தால் காத்துக் கொண்டால்

            கன்மலை மேல் உள்ள வீடாய்

            உன்னை ஆசீர்வதிப்பாரே

 

            கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் - (2)

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...