49.
பல்லவி
அல்லே
லூயா அல்லே லூயா
அற்புதனே
ஒமே காவே!
சரணங்கள்
1. தோத்திரம் பாடிப் போற்றுவேன்
தோத்திரம் இயேசு ராசனுக்கே
ஆதியு மந்தமு மில்லோனே
அரூப சொரூபா தோத்திரம் - அல்லேலூயா
2. பொன்னகர் மன்னர் புல்லணை மீதிலே
பிள்ளையாய் வந்தார் தோத்திரம்
பட்சமுற்றே எந்தன் பாவந் தீர்த்த
பெத்தலை வாசனே தோத்திரம் - அல்லேலூயா
3. மாயமாய் உலகை மறந்தநான்
மன்னவா உன்அன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர்தா ரணியில்
மனுவான அன்புக்காய் தோத்திரம் - அல்லேலூயா
4. மங்களமே சீயோன் மணாளா
மாறாத பூரண சீராளா
மங்காத நித்திய வாசனே
மாசற்ற அன்புக்காய் தோத்திரம் - அல்லேலூயா
5. அமரர் போற்றும் அழகுள்ளோய்
அரூபியே சொரூபியே தோத்திரம்
எமது பாவம் நீக்கினாய்
என்றும் உன்கரம் ஆக்கினாய் - அல்லேலூயா
No comments:
Post a Comment