29 January 2026

அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

நிஜீ.கீதங்கள்:1452

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                        அனைத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவரே

                        நீர் நினைத்தது ஒரு நாளும் தடைபடாதையா

 

1.         நீர் முடிவெடுத்தால் யார்தான் மாற்ற முடியும் - (2)

            எனக்கென முன்குறித்த எதையுமே

            எப்படியும் நிறைவேற்றி முடித்திடுவீர் - 2

            உமக்கே ஆராதனை உயிருள்ள நாள் எல்லாம் - அனைத்தையும்

 

2.         நான் எம்மாத்திரம்

            ஒரு பொருட்டாய் எண்ணுவதற்கு - 2

            காலைதோறும் கண்ணோக்கிப் பார்க்கிறீர்

            நிமிடந்தோறும் விசாரித்து மகிழ்கிறீர் - 2

            உமக்கே ஆராதனை உயிருள்ள நாள் எல்லாம் - அனைத்தையும்

 

3.         என்னைப் புடமிட்டால் (நான்)

            பொன்னாக துலங்கிடுவேன் - 2

            நான் போகும் பாதைகளை அறிந்தவரே

            உந்தன் சொல்லை உணவு போலக் காத்துக்கொண்டேன் - 2

            உமக்கே ஆராதனை உயிருள்ள நாள் எல்லாம் - அனைத்தையும்

 

4.         நான் எண்ணி முடியா

            அதிசயம் செய்பவரே - 2

            காயப்படுத்தி கட்டுப்போடும் கர்த்தரே - என்னை

            அடித்தாலும் அணைக்கின்ற அன்பரே - 2

            உமக்கே ஆராதனை உயிருள்ள நாள் எல்லாம் - அனைத்தையும்

 

 

5.         என் மீட்பரே உயிரோடு இருப்பவரே - (2)

            இறுதி நாளில் மண்ணில் வந்து நிற்பதை

            என் கண்கள்தானே அந்நாளில் காணுமே - 2

            எப்போது வருவீரையா என் உள்ளம் ஏங்குதையா - அனைத்தையும்

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...