27 January 2026

அள்ள அள்ள குறையாதது சொல்ல

நிஜீ.கீதங்கள்:364

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அள்ள அள்ள குறையாதது

                        சொல்ல சொல்ல முடியாதது

                        இயேசுவின் அன்பு அன்பு இயேசுவின் அன்பு

 

1.         மானிட வடிவில் வந்த அன்பு

            பாவியை நேசிக்கும் தூய அன்பு

 

2.         நீளம் அகலம் இல்லாத அன்பு

            நீசனாம் என்னையும் நேசிக்கும் அன்பு

 

3.         சிலுவையில் தன்னை தந்த அன்பு

            சிந்திய இரத்தத்தாலே மீட்கும் அன்பு

 

4.         குஷ்டரோகியை சுகமாக்கும் அன்பு

            கஷ்டப்படுவோர்க்கு உதவிடும் அன்பு

 

5.         நாள்தோறும் நன்மைகள் செய்திடும் அன்பு

            நேற்றும் இன்றும் என்றும் மாறிடா அன்பு

 

6.         கண்ணீரை துடைக்கும் கனிவான அன்பு

            கவலைகள் நீக்கிடும் கருணையின் அன்பு

 

7.         துன்பத்தில் இன்பம் நல்கிடும் அன்பு

            துணையாக கூடவே இருக்கின்ற அன்பு

 

 

- Rev. Alexander (ocheri)

 

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...