29 January 2026

அன்பராம் இயேசுவின் அன்பினை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பராம் இயேசுவின்

                        அன்பினை எண்ணியே

                        அளவில்லா துதிகளுடன்

                        சந்தோஷ கீதங்களால்

                        எந்நாளுமே பாடியே போற்றிடுவேன்

                        பரமனை ஸ்தோத்தரிப்பேன்

 

1.         ஜீவனுள்ளவரை இயேசு எந்தன் மேய்ப்பர்

            கவலை எனக்கு இல்லையே

            புல்லுள்ள இடங்களிலும் அமர்ந்த தண்ணீரண்டையும்

            என்னை நடத்திச் செல்லுவார் - 2

 

                        காலம் மாறினாலும்

                        பூமி அழிந்தாலும்

                        இயேசு என்றும் மாறிடார் - 2

 

            எந்தன் நேசரே எந்தன் அடைக்கலமானவர்

            போக்கிலும் வரத்திலும் என்னைக் கரம்பற்றி நடத்துவார் - 2 - அன்பராம்

 

2.         உலர்ந்த எலும்புகளை உயிர்க்கச் செய்தவரே

            உமக்கே நிகரே இல்லையே

            சிவந்த சமுத்திரத்தை இரண்டாய் பிளக்கச் செய்து

            என்னை நடத்திச் செல்லுவீர் - 2

 

                        நல்ல தேவனின்

                        வல்ல வார்த்தைகளால்

                        எந்தன் வாழ்வு மலரும் - 2

 

            எந்தன் தேவனே எந்தன் பரிகாரி ஆனவர்

            புதிய கிருபைகள் அனுதினமும் தருபவர் - 2 - அன்பராம்

 

3.         வான சேனைகள் சூழ எக்காளச் சத்தம் முழங்க

            மேகமீதில் ஒரு நாள்

            மாசற்ற ஜோதியாக மகிமை இராஜனாக

            மணவாளன் வந்திடுவார் - 2

 

                        ஆயத்தமாகிடுவேன்

                        அன்பரை சந்தித்திட

                        பரிசுத்தர் கூட்டத்தோடு - 2

 

            அந்த நாள் சமீபமே எந்தன் இதயம் பூரிக்குதே

            செல்வேன் அன்பரோடு வாழ்வேன் நித்தியமாய் - 2 - அன்பராம்

 

 

- Sis Yamuna

 

 

 

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...