27 January 2026

அழைப்பின் தொனி எந்நாளும்

நிஜீ.கீதங்கள்:1666

To Download Txt Lyrics file

 

                   அழைப்பின் தொனி எந்நாளும்

                   என்னில் கேட்குதே

                        அலை அலையாய்

                        இயேசு அன்பு என்னில் பாயுதே

 

1.         அக்கரைக்கு அழைக்கும் நேசர் அன்பு நேசரே

            அவரோடு நாமும் செல்ல ஆயத்தமாவோம்

            அலைகடல் மேல் நடந்தவரின் அன்பு பெரியதே

            கடும் புயலும் பெருங்காற்றும் என்னைத் தொடாதே

 

2.         மாறாத உம்முடைய கிருபை வரங்களும்

            ஆவியாலும் தேகத்தாலும் ஆணியாகுதே

            பொன் பொருளும் மண்ணின் வாழ்வும் மாயையாகுதே

            மணவாளன் இயேசுவை நான் நினைத்துப் பார்க்கையில்

 

3.         மோட்ச யாத்திரை செல்லுகின்ற மேலோக வாசி

            இப்புவியை நடந்து நானும் அக்கரை சேர்வேன்

            ஆரவார சத்தம் என்னில் வானில் கேட்கும் நாள்

            அவரோடு சேர்ந்து நான் விண்ணில் மகிழுவேன்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...