28 January 2026

அற்புதம் அற்புதம் அற்புதம் தேவன்

பாடல்

To Download Txt Lyrics file

 

            அற்புதம் அற்புதம் அற்புதம்

            தேவன் செய்த அற்புதம்

            அவர் சொல்லும் செயலும் அற்புதம்

            நடத்துதலும் அற்புதம்

            நாமம் அதிசயம்

            பாதையும் அற்புதம்

 

                        அல்லேலூயா அல்லேலூயா (8)

 

1.         செங்கடலை தேவன் பிளந்ததும் அற்புதம்

            எகிப்தியரை அதிலே அமிழ்த்தியதும் அற்புதம்

            மேக ஸ்தம்பத்தால் காத்ததும் அற்புதம்

            அக்கினி ஸ்தம்பத்தால் நடத்தியதும் அற்புதம்

 

2.         வானத்தின் மன்னாவை தந்ததும் அற்புதம்

            காடைகளை கொண்டு போஷித்ததும் அற்புதம்

            மாராவின் கசப்பை மாற்றியதும் அற்புதம்

            கன்மலையின் தண்ணீரை தந்ததும் அற்புதம்

 

3.         யோர்தான் பின்னிட்டு திரும்பியதும் அற்புதம்

            யோசுவாவால் சூரியன் நின்றதும் அற்புதம்

            எரிகோவின் மதில்கள் வீழ்ந்ததும் அற்புதம்

            எங்கும் ஜெயத்தை தந்ததும் அற்புதம்

 

4.         தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றியதும் அற்புதம்

            கண்ணீரை துடைப்பதும் தேற்றுவதும் அற்புதம்

            பர்த்திமேயு கண்களை திறந்ததும் அற்புதம்

            பரிகாரி கர்த்தரால் காண்பாய் அற்புதம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...