28 January 2026

அனாதி தேவன் என் அடைக்கலம்

நிஜீ.கீதங்கள்:2416

To Download Txt Lyrics file

 

                   அநாதி தேவன் என் அடைக்கலம்

                        அவர் நித்திய புயங்கள் என் ஆதாரம்

                        யாக்கோபின் தேவன் என்

                        உயர்ந்த அடைக்கலமே-2

                        பெலனும் அவரே துணையும் அவரே

                        பாதுகாக்கும் பரமன் அவரே

 

1.         கொந்தளிக்கும் அலை புரண்டுவந்தாலும்

            கோரப் புயல் என் மேல் வீசினாலும்

            காற்றையும் கடலையும் அமர்த்திய இயேசு

            கரத்தின் நிழலில் மூடிடுவார்

 

2.         ஆபத்துக் காலத்தில் கூப்பிடும் போது

            அருகில் வந்து கரம் பிடிப்பாரே

            கண்ணீரின் பாதையில் நடந்திடும் போது

            தோளில் சுமந்து தாங்கிடுவார்

 

3.         சோதனை சோர்வுகள் சூழ்ந்து கொண்டாலும்

            வேதனை பாரங்கள் நெருங்கி வந்தாலும்

            உலகை ஜெயித்த இயேசுவை பார்ப்பேன்

            சோர்வுகள் பாரங்கள் அகன்றிடுமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...