28 January 2026

அற்புதராஜன் இயேசுவை நம்பு

பாடல்

To Download Txt Lyrics file

 

          அற்புதராஜன் இயேசுவை நம்பு

            அற்புதங்கள் செய்திடுவார்

            அதிசயமான தேவனைத் தேடு

            அதிசங்கள் செய்திடுவார்

 

                        எல்லோரும் பாடுங்கள்

                        கைத்தாளம் போடுங்கள்

                        ஸப்தஸ்வரங்களில் சங்கீதம் பாடுங்கள் - அற்புதராஜன் இயேசுவை

 

1.         பாவியை விடுதலை செய்திடுவார்

            பாவக் கட்டுகளை அவிழ்த்தெறிந்திடுவார்

            சாபத்தை நீக்கி ஷேமம் தருவார்

            சந்தோஷமாய் நம்மை வாழ வைப்பார் - எல்லோரும் பாடுங்கள்

 

2.         நாதியற்ற மனுஷராய் இருந்தாலும் - செத்து

            நாலு நாளாய் கல்லறைக்குள் கிடந்தாலும்

            உயிருடன் எழுப்பிட அவர் வருவார் - இயேசு

            யாரென்று அப்போது நீ அறிவாய் - எல்லோரும் பாடுங்கள்

 

3.         குருடரும் வருவார் அவர் பின்னே

            பார்வை அடைந்தே செல்வார் அவர் முன்னே

            முடவரும் அமர்வார் அவர் பின்னே

            துள்ளி எழுந்தே நடப்பார் அவர் முன்னே

            ஆச்சரியமான தேவனவர் - நம்மை

            ஆதிசயமாய் அசத்துகின்றவர் - எல்லோரும் பாடுங்கள்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...