28 January 2026

அற்புதம் அற்புதமே என் இயேசு

பாடல்

To Download Txt Lyrics file

 

                   அற்புதம் அற்புதமே

                        என் இயேசு அற்புதமே

                        என் வாழ்வில் செய்த

                        அற்புதம் அற்புதமே - அற்புதம் அற்புதமே

 

1.         கானாவூரின் கல்யாணத்தில் வருகை தந்தவர்

            காய்ந்துபோன பாத்திரம் யாவும் நிரப்புங்கள் என்றார்

            நிரப்ப நிரப்ப அற்புதங்கள் செய்துகாட்டினார்

            நல்ல ரசம் என்று கூறி பரவசமடைந்தார் - அற்புதம் அற்புதமே

 

2.         குஷ்டரோகியை கைகளினால் தொட்ட இயேசுவாம்

            குருடர் செவிடர் சப்பாணிகள் சொஸ்தமாயினார்

            கண்ணீர் சிந்தும் மக்களுக்கு ஆறுதல் சொன்னார்

            கலக்கமின்றி வாழ நம்மை ஜீவன் தந்தவர் - அற்புதம் அற்புதமே

 

3.         வார்த்தை சொல்ல வருத்தம் யாவும் நீங்கிப் போயிற்றே

            வஸ்திரத்தைத் தொட்டவுடன் வியாதி நீங்கிற்றே

            இயேசு நாமம் சொன்னவுடன் பயமும் நீங்குமே

            இன்றுமவர் அற்புதங்கள் செய்ய வல்லவர் - அற்புதம் அற்புதமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...