27 January 2026

அற்புத இயேசுராஜனே உத்தம மணாளனே

நிஜீ.கீதங்கள்:891

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          அற்புத இயேசு ராஜனே உத்தம மணாளனே

            நீரே என் ஆறுதல் - 2

            ஓ... ஓ... நீரே என் ஆறுதல்

 

                        என் கோட்டை என் துருகம்

                        நான் நம்பினவர் என் அடைக்கலம் - 4

 

1.         கனவிலும் மறவேன் நீர் செய்த நன்மைகள்

            நனவிலும் மறவேன் நீர் செய்த அதிசயங்கள் - 2

 

                        என் இராஜா என் ரோஜா

                        என் தெய்வம் என் இயேசு - 4

 

2.         நேற்றும் இன்றும் என்றும் மாறா தேவன்

            நான் போற்றிப் பாடும் சர்வ வல்ல தேவன் - 2

 

                        என் அன்பர் என் இன்பர்

                        என் நண்பர் என் இயேசு - 4

 

3.         ஒருவராய்ப் பெரிய காரியங்களைச் செய்பவர்

            இருளில் இருந்து புதையலைக் கொண்டு வருபவர் - 2

 

                        நீர் பெரியவர் துதிக்குப் பாத்திரர்

                        எனக்கு உரியவர் என் இயேசு - 4

 

 

- மோசஸ் ராஜசேகர்

 

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...