ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
கர்த்தரில்
கலந்து பக்தியில் உரைந்து - 2
உலகை மறந்து குலங்கள் துறந்து
கர்த்தரை
ஜெபிக்கும் - ஜெபமே ஜெயம்
1. இருளில்
வாழும் இதயம்
புதிய
ஒளியைக் கண்டிடும்
வழியை
அறியா வாழ்வும்
புதிய
பாதை அறிந்திடும்
கர்த்தரின் நினைவில் வாழ்ந்திடும் இதயம்
அழிவைக் காண்பதில்லை
கர்த்தரை நினைத்து ஜெபிக்கும் இதயம்
தோல்வியில் துவழ்வதில்லை - ஜெபமே ஜெயம்
2. ஆதியும்
அந்தமும் அவரே
நம் அறிவின்
எல்லையே
காலையும்
மாலையும் அவரே
நம் மகிழ்வின்
எல்லையே
கர்த்தரின் கரங்கள் வல்லமை மிகுந்தது
காலம் கடந்தது
கர்த்தரின் மாட்சிமை எல்லையில்லாதது
நிரந்தரமானது - ஜெபமே ஜெயம்
- John Peter
No comments:
Post a Comment