21 January 2026

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் தேவா

ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   ஜெபிக்கும் வாஞ்சை எனக்குத் தாரும் தேவா

                        விண்ணப்ப ஆவியால் என்னை நிரப்பும் தேவா - 2

 

1.         கருத்துடன் கண்ணீருடன் ஜெபிக்க

            கர்த்தரே இன்று எனக்கு கிருபை தேவா - 2

            காலம் நேரம் மறந்து உந்தன்

            சமூகத்தில் ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்

 

2.         பாவத்தில் அழியும் ஜனங்களுக்காய்

            திறப்பின் வாசலில் நிற்கக் கிருபை தாரும் - 2

            தலை தண்ணீராய் கண்கள் கண்ணீராய்

            பாரத்தோடு ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்

 

3.         உருக்கமாய் உம்மைப் போல் ஜெபித்திடவே

            உன்னதரே உம் ஆவியால் நிரப்பிடுமே - 2

            இதயம் நொறுங்கி பெருமூச்சோடு

            ஊக்கமாய் ஜெபிக்க கிருபை தாருமே - 2 - ஜெபிக்கும்

 

 

- Rev. J. Jayachandran

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...