அழைக்கிறார் இயேசு உன்னை
பாவி நீ
மனந்திரும்பு! - 2
பரலோகம்
உன் அருகில்
சீக்கிரமாய்
மனந்திரும்பு - அழைக்கிறார்
1. உன் சுய
இச்சையினால்
பாவத்திலே
சிக்கினாயோ - 2
சமாதானம்
இன்றி தவிக்கின்றாயோ
தயவாய்
உன்னை அழைக்கிறாரே - அழைக்கிறார்
2. உலகத்தின்
சிற்றின்பத்தால்
சீரழிந்து
போகின்றாயோ - 2
உதவிடுவாரின்றி
ஏங்குகின்றாயோ
நேசமாய்
உன்னை அழைக்கிறாரே - அழைக்கிறார்
3. கடன் தொல்லை
நெருக்கத்தினால்
கதறி நீயும்
அழுகின்றாயோ
விடுவிப்பாரின்றி
விம்முகின்றாயோ
கிருபையாய்
உன்னை அழைக்கின்றாரே - அழைக்கிறார்
- P.G.T. ஆல்வின் ஜேக்கப்
No comments:
Post a Comment