22 January 2026

அருணோதயம் செபிக்கிறேன் அருள்பரனே

அருணோதயம் செபிக்கிறேன் அருள்பரனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

55.

 

                             பல்லவி

 

                   அருணோதயம் செபிக்கிறேன்

                   அருள்பரனே கேளுமேன்

                        ஆவிவரம் தாருமே - என் இயேசுவே

 

                             சரணங்கள்

 

1.         கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே

            கரங்கு வித்துத் தோத்தி ரிக்கிறேன் - என் இயேசுவே

            சிரங்கு னிந்து தோத்தி ரிக்கிறேன் - அருணோ

 

2.         இந்தநாளைக் காணச் செய்தீர் இரக்கமுள்ள தெய்வமே

            இதற்கா யும்மைத் தோத்தி ரிக்கிறேன் - என் இயேசுவே

            இதயத் தாலும் தோத்தி ரிக்கிறேன் - அருணோ

 

3.         கதிரவன்எ ழும்பிவரும் முறையின் படி என்மேலே

            கர்த்த ரேநீர் பிரகா சித்திடும் - என் இயேசுவே

            நித்தம் நித்தம் பிரகா சித்திடும் - அருணோ

 

4.         உலோகமதில் நான்புகுந்து வேலைசெய்யப் போகிறேன்

            தூத னாலே காவல் செய்யுமேன் - என் இயேசுவே

            சமுகம் என்னைச் சூழச் செய்யுமேன் - அருணோ

 

5.         பகலில்வரும் மோச மொன்றும் தமியன் மேல்வி ழாமலே

            பாது காக்க வேணும் தெய்வமே - என் இயேசுவே

            சூது வாது போக்கும் அண்ணலே - அருணோ

 

6.         மாமிசமும் கண்ணும்இந்த மாய்கையில்வி ழாமலே

            ஆவிக் குள்அ டங்கச் செய்யுமே - என் இயேசுவே

            பாவிக் கருள் பெய்யச் செய்யுமே - அருணோ

 

 

- அருள்திரு. ச. தாவீது

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...