ஸ்வர்ண
ராகங்கள் ஸ்வரம் பாடவே
வெள்ளி
மணி ஓசைகள் ஜதி போடவே
ராகங்கள் தாளங்கள் கைத்தாளங்கள்
தந்து உம்மை தினந்தோறும் நான்
பாடுவேன் - 2
1. பன்னிரண்டு வருடம் பாடுகள் பட்டவளாய்
பற்பல இடங்களில் ஓடி அலைந்து திரிகின்றாள்
- 2
பாவேந்தர் இயேசுவின் ஆடையை தொட்டாள் -
(2)
அந்த க்ஷணமே சுகமடைந்தாள் - ஸ்வர்ண
2. கானா ஊரிலே கல்யாண வீட்டிலே
திராட்சை ரசமில்லையே இயேசுவை தேடியே வந்தனரே
- 2
ஜாடிகளில் தண்ணீரை நிரப்பிடச் சொன்னார்
- (2)
தண்ணீரை ரசமாக்கினார் - ஸ்வர்ண
3. எத்தனை அற்புதங்கள் என் வாழ்வில் செய்தீரே
எண்ணிடக்கூடுமோ
என் வாழ்நாளும் போதுமோ - 2
இயேசுவை
அன்றி நான் யாரைப் பாடுவேன் - (2)
என் தேவன்
இவரைப் பாடுவேன் - ஸ்வர்ண
- S. Gnanasekar
No comments:
Post a Comment