22 January 2026

அருமையுள் ளேசுவே குருசினில் மரித்தென்

கீ.கை:252

To Download Txt Lyrics file

 

252.

 

                             கண்ணிகள்

 

1.       அருமையுள் ளேசுவே குருசினில் மரித்தென்

          ஆவி யைமீட் டஇரட் சகனை,

            சகலமும் மறந்துநான் சகலமும் வெறுத்துநான்

            தஞ்சம்என் றுனையே தேடி வாறேன்!

 

2.         வீடும் மறந்துநான் நாடும் மறந்துஎன்

            உடையவ னேஉந்தன் திருமுகம்காண

            அடியனை வழியதில் பலவித ஆபத்தின்

            நடுவினில் நடத்தி பரிபா லித்தாய்!

 

3.         அப்பனோ அம்மையோ அண்ணனோ தம்பியோ

            அன்புகூ ருவரோ நண்பா உனைப்போல்,

            சகலமும் மறந்துநான் சகலமும் வெறுத்தேன்நான்

            சாமிநின் பாதம் போதும் எனக்கு!

 

4.         எந்தனுக் காகநீ எப்பாடு பட்டனை

            எந்தையே நான்உனக் கீடெதும் செய்திலேன்!

            முந்திய உன்திரு உன்னத அன்பைநான்

            முற்றிலும் நம்பியே இக்கதி அடைந்தேன்!

 

5.         நான்உனைத் தேடாத காலத்தில் நீஎனை

            நாடியே தேடி நம்பிக்கை யளித்தாய்;

            ஈனச் சிலுவையில் ஏறிடத் துணிந்தெந்தன்

            எண்ணத்தை எல்லாம்நீ கொள்ளைகொண் டாயே!

 

6.         நம்பிக்கை இல்லாதோர் நானிலத் தோருக்கு,

            நாளொரு மூன்றில்நீ சாவைவென் றுயிர்த்ததால்,

            அம்பரன் உனைப்போல், வெம்பாவி ஏழையேனும்

            உம்பரம் தனிலுயர் வேனெனக் காட்டினாய்!

 

7.         பஞ்சம் பசியுடன் நிந்தை தூஷணிகளை

            பட்டுநான் மகிழ்வேனே, பராபரன் இயேசுவுக்காய்!

            உந்தனைச் சேவித்து நிந்தை அடைவதில்

            உன்னத இன்பம் சுரந்து வருகுமே!

 

8.         ஆவிதே கம்உயிரும் பேயுல குடலோடு

            மேவிடும் போரில்என் தூய்மையைக் காத்திட

            உந்தனின் ஆவிஎன் சிந்தையில் வேணுமே

            உவந்தளிப் பாய்நின் உன்னத ஈவையே!

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...