22 January 2026

அய்யனே உன் வேதம் இன்பமே

ஞா.கீ:146

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

146. இராகம்: பியாகடை                       ரூபகதாளம் (422)

 

                             பல்லவி

 

          அய்யனே உன் வேதம் இன்பமே,

 

                             அனுபல்லவி

 

            அதனை மறுத்து மீறில் அதிகம் வருகுந் துன்பமே - அய்

 

                             சரணங்கள்

 

1.         தேன் கூண்டொழுகு தேனில் மிக்கதே; சுத்த

            தெளிந்த நறுந்தேனில் தக்கதே,-உண்ண

            தித்திப் பதிகம் கொண்ட சுத்த தகைமைவிண்ட - அய்

 

2.         பேதையை அறிவாக்குஞ் சத்தியம்-ஆவி

            பெருக உயிர்ப்பிக்கும் நித்தியம்,-நன்மை

            பெருக்கங் கொண்ட நீதி, உருக்கங்கொண்ட ஜோதி - அய்

 

3.         பொன்னிலும் உயர்ந்த பொன்னாகுமே,-மாற்றிப்

            புடமிட்ட பசும் பொன்னென்றாகுமே-நடை

            புகுந்த வழிக்குத் தீபம் தகுந்த அருளி லாபம் - அய்

 

4.         ஆவியின் பட்டயம் ஆமே-நித்யம்

            அருள் மோட்சத்தில் கொண்டு போகுமே-உந்தன்

            அரிய மகிமை காட்டும் பெரிய கவலை யோட்டும் - அய்

 

5.         சுத்த சுத்தம் தரும் சுத்தமே;-மிக

            துய்ய அறிவு தரும் வித்தமே;-இனிமை

            சொல்லத் தொலைந்திடாத வல்லத் தகையதீத - அய்

 

 

- பு.சு.யோ

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...