ஜெபமே ஜெபமே
ஜெயத்தை தந்திடும் ஜெபமே - 2
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபம் தான் ஜெயம் தருமே
முடியாதது ஒன்றுமில்லை
ஜெபித்து ஜெயம் பெறுவேன்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா - 2
1. இருப்பு தாழ்ப்பாள்களை
முறித்துப் போடும் ஜெபம் - 2
வெண்கல கதவை உடைத்து நொறுக்கும்
வல்லமையுள்ள ஜெபம் - 2 - ஜெபமே
2. சர்ப்பங்கள் தேள்களையும்
மிதித்துப் போடும் ஜெபம் - 2
சிங்கத்தின் வாயை அடைக்கும் ஜெபமே
வல்லமையுள்ள ஜெபம் - 2 - ஜெபமே
3. போராடி ஜெபிக்கும் போது
ஜெயத்தை தந்திடும் ஜெபம் - 2
பேய்களை விரட்டி நோய்களை அகற்றும்
ஜெபம் வல்லமையுள்ள ஜெபம் - 2 - ஜெபமே
No comments:
Post a Comment