27 January 2026

அறிந்தவரும் என்னை புரிந்தவரும்

நிஜீ.கீதங்கள்:950

To Download Txt Lyrics file

 

                   அறிந்தவரும் என்னை புரிந்தவரும்

                        ஆன்மாவை மீட்பவரும்

                        இயேசு ஜெபத்தை எல்லாம் கேட்பவரும்

                        கண்ணீர் யாவு துடைப்பவரும்

 

1.         இயேசு என்னும் இரட்சகராம்

            இம்மானுவேலாய் கூட நிற்பவர்

            ஆபத்திலே அனுகூலமாய்

            ஆற்றி தேற்றி ஆதரிப்பாரே

 

2.         தேற்றரவாளன் தேற்றுவாரே

            துக்கத்தை எல்லாம் மாற்றுவாரே

            வல்லமையால் நிரப்பிடுவார்

            வரங்களையே பொழிந்திடுவார்

 

3.         பாசம் வைத்தவர் நேசம் வைத்தவர்

            பாவி என் மேல் கிருபை வைத்தவர்

            மாறிடாத மா நேசராய்

            மனக் குறைகள் தீர்த்திடுவாரே

 

4.         கவலை கண்ணீர் துயரமெல்லாம்

            கல்வாரி குருசில் சுமந்தனரே

            பாரம் ஏனோ? வருத்தம் ஏனோ?

            வந்திடுவாய் இயேசு வண்டையில்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...