28 January 2026

அனுதின வாழ்க்கையிலே கர்த்தருக்கு

நிஜீ.கீதங்கள்:1153

To Download Txt Lyrics file

 

                   அனுதின வாழ்க்கையிலே

                        கர்த்தருக்குப் பயப்படுவோம்

                        நீதியின் தேவனவர் அதிசயமானவராம்

                        சேனையின் கர்த்தரின் தேவ வைராக்கியம்

                        நீதியை நிலைப்படுத்தும்

                        தேசத்தை சீர்படுத்தும்

 

1.         கர்த்தரின் பார்வைக்கு விலகின நினிவே

            நகருக்காய் தேவன் பரிதவித்தார்

            நினிவே அல்ல தர்ஷீஸ் போன

            யோனாவை கடலில் வழி மறித்தார்

            மூன்று நாள் இரவுமாய் பகலுமாய் கதறியே அழுதான்

            நினிவேயின் ஜனங்களும் ராஜாவும் திருந்தவே

            சுவிசேஷம் அறிவித்தான்

            தேவ வைராக்கியம்

            நினிவேயை காத்தது அல்லவோ

 

2.         பலிகளை பார்க்கிலும் தேவனுக்கே

            நாம் பணிவது தானே உத்தமமாம்

            கீழ்ப்படியாத சவுல் என்னும் ராஜா

            பதவியை அன்று இழந்தானே

            தாவீது சிறுவனாய் இருந்தாலும்

            கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டார்

            கோலியாத் பலவானாய் எண்ணப்பட்டும்

            தாவீது பெற்றார் வெற்றியே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...