26 January 2026

அழகே என் இயேசுவே என் சுவாசமே

நிஜீ.கீதங்கள்:2531

To Download Txt Lyrics file

 

                   அழகே என் இயேசுவே - (2)

                        உயிரே என் சுவாசமே

                        உயிரே என் இயேசுவே

 

1.         அமுதே உம்மை துதித்திடுவேன்

            தேனிலும் இனிமையே

            தெவிட்டாமல் சுவை தருமே

            தித்திக்கும் உம் நாமமே

 

2.         சதா காலமும் வாழ்பவரே

            சகலத்தை படைத்தவரே

            சர்வலோகையும் ஆள்பவரே

            அடியேனை நேசித்தீரே

 

3.         பதினாயிரம் பேரில் சிறந்தோர்

            பாவமெல்லாம் நீர் சுமந்தீர்

            பரலோகத்தில் பெயர் எழுத

            பரிகார பலியானீர்

 

4.         எனக்காக அடிக்கப்பட்டீர்

            அழகெல்லாம் நீர் துறந்தீர்

            என் பாவங்கள் யாவும் சுமந்தீர்

            இரத்தம் சிந்தி நீர் மரித்தீர்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...